Saturday, January 16, 2010

9 கோடி ரூபாய் உதவிகள்



January 15, 2010

முயற்சித்தால் வெற்றி தேடி வரும்



மேட்டுப்பாளையம்:கோவை ஸ்ரீவிஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு திறன் ஊக்கப்பரிசு வழங்கும் விழா, சிறுமுகை விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. பிளஸ் 2வில் 1,000, 10ம் வகுப்பில், 450க்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. தமிழக அரசு பள்ளி கல்வித்துறை இயக்குனர் டாக்டர் பெருமாள்சாமி தலைமை வகித்து பேசியதாவது: தனியார் பள்ளிகளில் கட்டாய கல்விக் கட்டணம் வசூல் செய்யும் இந்நாளில்,1,500 மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிப்பது, மற்ற பள்ளிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.


இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் நல்லதாக இருக்கும். முயற்சி செய்து கொண்டே இருந்தால் வெற்றி நம்மை தேடி வரும். இப்பரிசுத் தொகையை பெறும் மாணவர்கள், இந்த சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் நல்லவர்களாக விளங்க வேண்டும். தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் பணம் வசூல் செய்கின்ற இந்நாளில், விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், பள்ளியை இரண்டு கோடி ரூபாய் செலவில் மாற்றி அமைத்து, அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வியை கொடுக்கிறது என்றால், நாம் பாராட்ட வேண்டும். இப்பள்ளி மேலும் வளர்ந்து பல்கலைக் கழகமாக மாறவேண்டும். இவ்வாறு பெருமாள்சாமி பேசினார்.


தமிழக அரசு மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர் மணி பேசுகையில், "உயர் கல்வி படிக்க முடியாத ஏழை, எளிய மாணவர்கள் இப்பள்ளியின் மூலம் படிக்க வாய்ப்பு உள்ளது. ஏழ்மை காரணமாக கல்வி வாய்ப்பை தவற விடக்கூடாது என்பதற்காக, இந்த அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் கல்வி உதவி மிகவும் போற்றத் தக்கது' என்றார். பிளஸ் 2, 10ம் வகுப்பில் முதல் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விஜயலட்சுமி அறக்கட்டளை தலைவர் ஆறுமுகசாமி ஊக்கத் தொகையும், கேடயமும் வழங்கினார். காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி அருளாசி வழங்கினார். முன்னதாக, விஜயலட்சுமி பொதுநல அறிக்கட்டளை நிறுவனர் ஆறுமுகசாமி வரவேற்றார்.


நன்றி - தினமலர்

.....................................................................................................





ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்

First Published : 05 Jan 2010 07:52:49 AM IST

Last Updated :

மேட்டுப்பாளையம் ஜன,4: பள்ளிகளின் நோக்கம், தரமான கல்வியை வழங்குவது மட்டுமின்றி, அது ஏழை மாணவர்களுக்கும் சென்றடையும் வகையில் இருக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் உமாநாத் கூறினார்.

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை விஜயலஷ்மி மெட்ரிக் மேநிலைப் பள்ளியின் முதலாமாண்டு விழா கோவை கேஜி நிறுவனங்களின் தலைவர் கேஜி பாலகிருஷ்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

ஸ்ரீ விஜயலஷ்மி பொதுநல அறக்கட்டளை நிறுவுனர் ஓ. ஆறுமுகசாமி முன்னிலை

வகித்தார். பள்ளி முதல்வர் பால்துரை வரவேற்றார். திருமதி சத்தியபாமா

குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

பள்ளியின் புதிய கட்டடத்தை திறந்து வைத்து ஆட்சியர் உமாநாத் பேசியது:

நன்றாக இயங்கிவரும் ஆலைகள் மூடப்படும்போது, அதைச் சார்ந்து இயங்கிவரும் பள்ளியோ அல்லது மருத்துவமனையோ மூடப்படுவதும் இயற்கை. ஆனால், சிறுமுகை விஸ்கோஸ் ஆலை மூடப்பட்டபோது, அதன் சார்பில் இயங்கிவந்த பள்ளியை மூடவிடாமல் விஜயலஷ்மி பொதுநல அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி, அப்பள்ளியிலுள்ள அனைத்து மாணவ,மாணவியருக்கும் இலவசக் கல்வியை வழங்கி வருவது, மிகவும் பாராட்டுக்குரியது.

கோவை மாவட்டம் அதிகளவில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை

கொண்டிருந்தாலும், அக்கல்லூரி கட்டணங்களை கூட கட்ட முடியாமல் கல்வியையே கைவிடும் நிலையில் நன்கு படிக்கும் ஏராளமான ஏழை மாணவர்கள் உள்ளனர். ஆனால் விஜயலஷ்மி அறக்கட்டளையினர் அம்மாதிரி ஏழை மாணவர்களை தேர்வு செய்து இலவச கல்வியை வழங்கி வருவது, ஈடு இணையற்ற செயலாகும்.

கடந்த வருடம் மட்டும் ரூ9}கோடி மதிப்பில் 5771}மாணவர்களுக்கு மதிப்பெண்

அடிப்படையில் கல்வி உதவி வழங்கியிருப்பது பெரிய சாதனையாகும். இப்பணி மேலும் தொட ர வேண்டுமென்றார்.

விழாவில், திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் சிவனாண்டி பேசியது:

உலகில் இன்று பணம் படைத்து வாழ்ந்து வரும் பெரும்பாலான செல்வந்தர்களுக்கு,

பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனம் வருவதில்லை. ஆனால் சிறுமுகை போன்ற

கிராமப் பகுதிகளில், ஒருபள்ளியை நிறுவி அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வியை வழங்கி வரும் அறக்கட்டளை நிறுவுனர் ஓ. ஆறுமுகசாமி, செல்வத்தை மட்டுமின்றி அதை ஏழைகளுக்கு கொடுத்துதவும் மனதையும் கொண்டவராக உள்ளார். சமுதாயத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு அடிப்படையாக உள்ள வறுமையைப் போக்க கல்வி மிகவும் அவசியமாகிறது. இந்தக் கல்வியை இலவசமாக வழங்குவதன் மூலம் குற்றவாளிகள் உருவாகாமல் தடுப்பதில் இந்த அறக்கட்டளை பெரும் பங்கு

வகிக்கிறது. இதைபோல், பிற மாவட்டங்களிலுள்ள செல்வந்தர்களும் பள்ளிகளை நிறுவி இலவசக் கல்வியை வழங்க முன்வந்தால், சமுதாயத்தில் குற்றங்கள் குறைந்து

காவல்துறையின் பணியும் பாதியாக குறையும் என்றார்.

விழாவில், பள்ளி கல்வித்துறை இயக்குனர் டாக்டர் பெருமாள்சாமி, முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி, பண்ணாரியம்மன் தொழில்நுட்பக் கல்லூரி தலைமை நிர்வாகி டாக்டர் நடராஜன், முன்னாள் டிஎஸ்பி வெள்ளிங்கிரி, கவிஞர் டாக்டர் பர்வீன் சுல்தானா, இந்தியன் வங்கி பொதுமேலாளர் அறிவானந்தம் ஆகியோர் பேசினர். வட்டாட்சியர் சுகுமாரன், ஊராட்சி ஒன்றியத் தலைவர் ராஜ்குமார், பேரூராட்சி தலைவர் உதயகுமார், ஊராட்சி துணைத் தலைவர் ஆர்.கே. பழனிச்சாமி, முன்னாள் எம்எல்ஏ சின்னராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிச் செயலர் பி.என்.ராஜேந்திரன் நன்றி கூறினார்.


நன்றி - தினமணி


.....................................................................................................



அடித்தட்டு மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் கலெக்டர் உமாநாத் பேச்சு


மேட்டுப்பாளையம், ஜன. 4-

சிறுமுகையில் விஜயலட்சுமி மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இப்பள்ளி யின் முதலாம் அண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியாக பள்ளி கட்டிட திறப்பு விழா, சிலை திறப்பு விழா நடைபெற்றது.

கலெக்டர் உமாநாத் பள்ளி புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சிவனாண்டி பட்டன் அழுத்தி திருவள்ளுவர் சிலையையும், பள்ளிக் கல்லித்துறை இயக்குனர் டாக்டர் பெருமாள்சாமி பட்டன் அழுத்தி விவேகா னந்தர் சிலையையும் திறந்து வைத்தார்கள். சத்தியபாமா பாலகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி வைத்து நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு கே.ஜி.டெனிம் நிர்வாக இயக்குனர் கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி, செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித் தார்கள். பள்ளி முதல்வர் பால்துரை வரவேற்றுப் பேசினார்.

விழாவில் கலெக்டர் டாக்டர் உமாநாத் பேசியதா வது:-

இந்த பள்ளி ஏற்கனவே ஒரு நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்த நிலையில், இங்குள்ள தொழிலாளர்கள், குழந்தைகளும் கல்வி கற்று வந்துள்ளனர். ஒரு நிறுவனம் நலிவடையும்போது, அதனைச் சார்ந்த ஊரும், பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பள்ளியை ஏற்று நடத்த முன்வந்து அனைவருக்கும் தரமான கல்வியை இலவசமாக கற்றுத்தர வேண்டும் என்ற அவர்களது எண்ணத்திற்கு எனது பாராட்டுக்கள். பள்ளிக்கல்வி தரமான தாகவும், அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் பள்ளிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தரமான கல்வியை அனை வரும் வழங்க வேண்டும். சமுதாயத்தில் உள்ள அடித் தட்டு மக்களையும் கல்வி சென்றடைய வேண்டும்.

அது இல்லை என்றால் தரமான கல்வி என்பது வீண். உயர் கல்வியை படிக்க அனைவருக்கும் வாய்ப்பு இல்லை. அனை வருக்கும் கல்வி சமச்சீராகக் கிடைப்பதும் இல்லை. அறக்கட்டளை சார்பாக இதுவரை 5771 பேருக்கு ரூ. 9 கோடி வரை கல்வி ஊக்கத்தொகையாக வழங் கப்பட்டுள்ளது என்பதை அறியும் போது மிகவும் பெருமையாக உள்ளது.

அரசும் சரி, மாவட்ட நிர்வாகமும் சரி அடித்தட்டு மக்களைக் கண்டறிந்து அவர்களது திறமைகளை வெளிக்கொணர பல நல்ல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றது.

இவ்வாறு கலெக்டர் உமாநாத் பேசினார்.

விழாவில் சென்னை தன்னம்பிக்கை பேச்சாளர் டாக்டர் ஐ.எஸ்.பர்வின் சுல்தானா, பண்ணாரியம்மன் தொழில் நுட்ப கல்லூரி முதன்மை கல்வி அலுவலர் டாக்டர் ஏ.எம்.நடராஜன், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. வெள்ளிங்கிரி, கோவை முதன்மைக் கல்வி அலுவலர் ஆனந்தி, கோவை இந்தியன் வங்கி பொது மேலாளர் மற்றும் வட்டாரத் தலைவர் அறிவானந்தம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

விழாவில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சுகுமாரன், காரமடை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜ்குமார், சிறுமுகை பேரூராட்சி தலைவர் உதயகுமார், ஜடை யம்பாளையம் ஊராட்டி துணைத் தலைவர் பழனி சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சின்னராஜ், புலவர் நஞ்சப்பன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். குழந்தைகள் பள்ளி செயலாளர் ராஜேந் திரன் நன்றி கூறினார்.

முடிவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

நன்றி - மாலைமலர்